பொருளாதாரம் பயில்வோம்
"பொருளாதாரம் என்பது செல்வத்தைப் பற்றிய ஒரு அறிவியல்"
-
Adam Smith
- மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளும் செல்வத்தை (Wealth ) திரட்டுதல் என்னும் நோக்கத்தை மையமாக வைத்தே சுழல்கின்றது. அந்த செல்வம் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, அதன் விநியோகம் மற்றும் பல்வேறு தரப்பட்ட பயன்பாடுகளைக் குறித்து விளக்கம் தரும் அறிவியல் பொருளியல் ஆகும்.
- மனித குல வரலாற்றில் தேவைகளைத் நிவர்த்தி செய்ய உண்டான தேடல்ககள வாழ்க்கையின் அடுத்த கட்ட பயனத்தினை உருவாக்கியது . நமக்கு அளவற்ற தேவைகள் உள்ளன ஆனால் உலகத்தில். அளவாள வளங்களே உள்ளன அதனை சரியான முறையில் நிர்வாகம் செய்தலே பொருமளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பு
ஆகும். பொருளாதாரத்தைக் குறிக்கும் Economics என்னும் வார்த்தை "வீட்டு நிர்வாகம்” என்னும்பொருள்
தரக் கூடிய "Oikonomio" என்னும் கிரேக்க வார்த்தையின் வழித்தோன்றல்.
- உலகத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எல்லாம்
தேவை மற்றும் வினியோகம் (Demand & Supply) பற்றாக்குறை மற்றும் உற்பத்தியைப் பொறுத்தே நடைபெறுகின்றன. பொருளாதாரம் பற்றிய அறிவு நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் நடவடிக்கைகள், சூழ்நிலை மாற்றங்கள், சந்தை நிலவரங்கள், அரசியல் ஆகியற்றை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது
- பொருளாதாரம் பயில்வதன் மூலம் நம்முடைய அன்றாட நிகழ்வுகளின் வாய்ப்புகள் பற்றி அறிந்து அதனை உபயோகப் படுத்ததல் மேலும் இடர்களை அறிந்து அவற்றை தவிர்த்துக் கொள்ள இயலும். பொருளாதார நடவடிக்கைகள் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருப்பவை. அல்ல. பொருளியல் என்பது சமூக அறிவியலின் ஒரு பிரிவு. ஆகும். நம்மைச் சுற்றிலும் நம்முடைய அன்றாட வாழ்க்கையைக் கட்டுப்படுத்தக் கூடிய அமைப்பு, வரி விதிப்பு, விலையேற்றம், வட்டி விகிதம், சமநிலையற்ற சந்தைகள், சொத்து சேர்த்தல் அனைத்தும் பொருளாதார காரணிகள் தான். பொருளாதார அறிவை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நாம் நம்முடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம்

Comments
Post a Comment