Posts

Showing posts from March, 2024

Finance - நிதியியல்

Image
நிதியியல் என்பது பணம் மற்றும் பணம் சார்ந்த பரிவர்த்தனைகள் குறித்த பாடப்பிரிவு ஆகும் . அளவற்ற தேவைகள் மற்றும் அளவான வளங்கள் இடையே சமநிலையை உருவாக்குவது பொருளாதாரத்தின் அடிப்படை . செல்வத்தை நிர்வகித்தல் பொருளாதரத்தின் மையமாக இருப்பது போல , செல்வத்தின் மிகப்பெரிய அளவுகோலாகிய பணம் மற்றும் அதன் சுழற்சிகள் பற்றிய அறிவு நிதியியல் ஆகும் . பணம் குறிந்த தெளிவான புரிதல்கள் இல்லாமல் எவ்வளவு வருமானம் ஈட்டினாலும் நீண்ட காலத்திற்கான செல்வம் சேர்த்தல் மற்றும் பொருளாதார சுதந்திரம்   என்பது சாத்தியமில்லாதது ஆகிவிடும் . பணத்தை எல்லாரும் சம்பாதித்து விட முடியும் . ஆனால் அறிவாளிகளால் மட்டுமே அதனைப் பாதுகாத்து வளப்படுத்த முடியும் . பணச்சுழற்சி பற்றி தெரிந்து கொள்ள நாம் வங்கிகள் , வட்டி விகிதம் , முதலீடுகள் , கடன்கள் , பணத்தின் கால மதிப்பு (Time Value of Money) பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் . நிதியியல் மூன்று முக்கியமான பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது . அவை   1) தனி நபர் நிதியியல் (Personal finance)   2) வர்த்தக நிதிய...